பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கவிழ்த்த நீலச் சட்டி போலக்
கண்முன் தோன்றும் வானம்!-நம்
கண்முன் தோன்றும் வானம்!
காலை மாலை கதிரைக் காட்டி
உலகைக் காக்கும் வானம்-இந்த
உலகைக் காக்கும் வானம்!


எட்டி நடந்தால் எட்டிப் போகும்
இருக்க இருக்கும் வானம்!-அருகில்
இருக்க இருக்கும் வானம்!
பட்டப் பகலில் கடலைப் போலப்
பரந்து கிடக்கும் வானம்!-கண் முன்
பரந்து கிடக்கும் வானம்!


புளியைப் போல் நிறத்தைக் காட்டிப்
புதுமை காட்டும் வானம்-அடிக்கடி
புதுமை காட்டும் வானம்!
ஒளியைத் தீயை மழையைக் காற்றை
உலகுக் களிக்கும் வானம்!-இந்த
உலகுக் களிக்கும் வானம்!