பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பெட்டைக் கோழி கூவுது!
பெட்டைக் கோழி கூவுது!-வெண்
முட்டையிட மூலை பார்த்து
முன்னும் பின்னும் தாவுது!
முன்னும் பின்னும் தாவுது!


முட்டை இட்ட கோழி குந்தி
முட்டைஅடை காக்குது!-கோழி
முட்டை அடை காக்குது!
வட்டச் சேவல் அருகில் வந்து
பார்த்துப் பார்த்துத் திரும்புது!


பஞ்சு போலச் சின்னச் சின்னக்
குஞ்சு தாயைத் தொடருது!-சின்னக்
குஞ்சு தாயைத் தொடருது!
அஞ்சி அஞ்சிப் பெட்டைக் கோழி
அருகி ருந்தே காக்குது!

13