பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூன்று சக்கர வண்டி !
முன்பின் போகும் வண்டி !
நானும் ஏறி மிதிப்பேன் !
நன்றாய்ப் போகும் வண்டி !


சட்டை போட்டுக் கொள்வேன் ;
தலையை வாரிக் கொள்வேன் ;
பொட்டு மிட்டுக் கொள்வேன் ;
வண்டி ஏறிப் போவேன் !


கையால் மணியை அடிப்பேன் ;
சாய்ந்து சாய்ந்து மிதிப்பேன் ;.
அய்யா அம்மா கண்முன்
வண்டி ஒட்டிக் களிப்பேன் !

22