பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்னச் சின்னப் புத்தகம் !
சிறுவர் படிக்கும் புத்தகம் !
அன்னை போல எந்த நாளும்
அறிவை ஊட்டும் புத்தகம் !


படங்கள் நிறைந்த புத்தகம் !
பாடல் நிறைந்த புத்தகம் !
கடலைப் போல என்றும் வற்றாக்
கருத்தை ஊட்டும் புத்தகம் !


கண்ணைத் திறக்கும் புத்தகம் !
கதைகள் சொல்லும் புத்தகம் !
மண்ணை விண்ணை விளக்கி நல்ல
வாழ்வ ளிக்கும் புத்தகம் !

23