பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இன்றும் நாளையும்

பாட்டி போலக் குனிந்து நடந்து
பல்லே இளித்துக் காட்டுவேன்!-இன்று
பல்லே இளித்துக் காட்டுவேன்!
கூட்டிப் பெருக்கி அம்மா போலக்
குடும்பம் நடத்திக் காட்டுவேன்!-நாளைக்
குடும்பம் கடத்திக் காட்டுவேன்!


வீட்டைக் காக்கும் அப்பா போல
மெல்லச் சிரித்துக் காட்டுவேன்!-இன்று
மெல்லச் சிரித்துக் காட்டுவேன்!
காட்டைக் காக்கும் சிப்பாய் போல
நிமிர்ந்து நடந்து காட்டுவேன்!-நாளை
நிமிர்ந்து கடந்து காட்டுவேன்!


காளை போல நடந்து காட்டிக்
கன்றைப்போலத் துள்ளுவேன்!-இன்று
கன்றைப் போலத் துள்ளுவேன்!
தோளைத் துக்கி நடைந டந்து
வாளை ஏந்திக் காட்டுவேன்!-நாளை
வாளை ஏந்திக் காட்டுவேன்!