பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


திரும்பி வந்தார்!

போன அம்மா திரும்பிவந்தார் ;
புதிய நகைகள் வாங்கிவந்தார் !
நானும் நகைகள் போட்டுக்கொண்டு
நடந்து போவேன் பள்ளிக்கின்று !

போன அப்பா திரும்பிவந்தார் ;
புத்தகம் பலகை வாங்கிவந்தார் !
நானும் பையிற் போட்டுக்கொண்டு
படிக்கப் போவேன் பள்ளிக்கின்று!

போன பாட்டி திரும்பிவந்தார் ;
பூவும் பழமும் வாங்கிவந்தார் !
நானும் பூவை முடித்துக்கொண்டு
பள்ளிக் கோடிப் போவேனின்று !

போன மாமி திரும்பிவந்தார் ;
புதிய சட்டை வாங்கிவந்தார் !
நானும் சட்டை போட்டுக்கொண்டு
நன்றாய்ப் போவேன் பள்ளிக்கின்று !

41