பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வகுப்பில்

பேசாதே

வகுப்பில் பேசாதே !-குழந்தாய் !
வகுப்பில் பேசாதே !

வகுப்புப் படிப்பு வாழ்க்கைப் படிப்பு
மனத்தில் வாங்கிக் கொள்ளு !-நீ
மனத்தில் வாங்கிக் கொள்ளு !
வகுப்பு முடிந்து வீட்டை யடுத்து
மனத்தில் எண்ணிக் கொள்ளு -நீ
மனத்தில் எண்ணிக் கொள்ளு !

அடக்கம் ஒடுக்கம் காட்டி வகுப்பில்
அன்பாய் விளக்கம் கேளு !-நீ
அன்பாய் விளக்கம் கேளு !
துடுக்குத் தனத்தை விடுத்துப் படிப்பைத்
தொடர்ந்து கற்றுக் கொள்ளு !-நீ
தொடர்ந்து கற்றுக் கொள்ளு !