பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன்

அளிக்கும்

வேலை


கல்வி கற்க வேண்டும் !-கைத்
தொழிலும் கற்க வேண்டும் !
கல்விச் செல்வம் போலே-கைத்
தொழிலும் செல்வ மாமே !

துய்மை செய்யக் கற்போம் !-சிறு
துடைப்பம் செய்யக் கற்போம் !
பாய்மு டையக் கற்போம் !-தோட்டப்
பயிர்வி ளைக்கக் கற்போம் !

தையல் வேலை கற்போம் !-சிறு
தட்டி செய்யக் கற்போம் !
பையப் பையப் பொம்மை-சட்டி
பானை செய்யக் கற்போம் !

48