பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கூடை முடையக் கற்போம் !-குருத்
தோலே முடையக் கற்போம் !
ஆடை தைக்கக் கற்போம் !-வீட்டிற்(கு)
அழகு சேர்க்கக் கற்போம் !

பின்னல் கற்றுக் கொள்வோம்!-நன்றாய்ப்
பேசக் கற்றுக் கொள்வோம் !
சின்னச் சின்ன வேலை-நாளைப்
பொன்ன ளிக்கும் வேலை !

49