பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நெஞ்சுக் குள்ளே
ஆசை உண்டாம் ;
உண்மை !

நினைவுக் குள்ளே
செயல்கள் உண்டாம் ;
உண்மை !

செயலுக் குள்ளே
விளைவும் உண்டாம் ;
உண்மை !

பஞ்சுக் குள்ளே
நூலும் உண்டாம் ;
உண்மை !

படிப்புக் குள்ளே
அறிவும் உண்டாம் ;
உண்மை !

அறிவுக் குள்ளே
புதுமை உண்டாம் ;
உண்மை !