பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வணக்கம் செய்வோம்


அன்னை தந்தை தெய்வம் !
அன்பாய் வணக்கம் செய்வோம் !

நம்மை ஈன்ற தெய்வம் ;
நம்முன் கண்ட தெய்வம் ;
நம்மை வளர்த்த தெய்வம் ;
நாளும் வணக்கம் செய்வோம் !

பள்ளிக்(கு) ஒடிப் படிப்போம் ;
பலவும் கற்று முடிப்போம் ;
உள்ளம் குளிர நடப்போம் ;
ஊரில் நற்பெயர் எடுப்போம் !

தலையை நிமிர்த்தி நடப்போம் ;
தாய்மொழி போற்றி வளர்ப்போம் ;
உலகப் புகழை எடுப்போம் ;
ஊருக் காக உழைப்போம் !

56