பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


எங்கள் பாப்பா தங்கப் பாப்பா!
எழுந்து விழுந்து நடக்கும் பாப்பா!
 
செங்கை ஆட்டி அழைக்கும் பாப்பா!
சிறுவிரல் சப்பித் துாங்கும் பாப்பா!

வைத்தால் கடிக்கும் பாப்பா!
வெடுக்கென் றிழுத்தால் சிரிக்கும் பாப்பா!

கையைப் பிடித்து கடக்கும் பாப்பா
கட்டி முத்தம் கொடுக்கும் பாப்பா!

குத்து விளக்கே எங்கள் பாப்பா!
குனிந்து சாய்ந்தே ஆடும் பாப்பா!

முத்தம் கொடுத்தால் முத்தம் கொடுக்கும்!
முகத்தை மறைத்தால் கையை எடுக்கும்!