பக்கம்:இன்னமுதம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்தர் தேவாரம்

ழாம் நூற்றாண்டில் சீர்காழி என்ற பகுதியில் சிவபாத இருதயர்க்கும் பகவதியாருக்கும் மகனாய் அவதரித்த பெரியாரே ஞானசம்பந்தர் ஆவார். தமது மூன்றாவது ஆண்டிலேயே இறைவியால் ஞானப்பால் ஊட்டப்பெற்று. எல்லா ஞானங்களும் கைவரப்பெற்று இறைவனைப் பாடத் தொடங்கியவர் இவர். திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாக வகுத்துள்ளார்கள்.

தந்தையாராகிய சிவபாத இருதயர் ஒரு நாள் குளிக்கச் செல்லும்போது மகனாகிய ஞானசம்பந்தரையும் உடன் அழைத்துச் சென்றார். அவர் இறைவியினுடைய திருவருளால் பாலூட்டப் பெற்று, பால் கடை வாயில் வழியக் கரையில் நின்றார். இதனைக் கண்ட தந்தையார், "யார் உனக்கு இந்தப் பாலைக் கொடுத்தார்கள்” என்று அதட்ட, இவர்தான் என்று தோணி புரத்தில் (சீர்காழியில்) உள்ள இறைவனை விரலினாலே சுட்டிக்காட்டி இப்பாடலைப் பாடுகின்றார். (சீர்காழி தஞ்சை மாவட்டத்தில் சிதம்பரத்தை அடுத்துள்ள ஊராகும். புகைவண்டி நிலையம் உள்ளது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/13&oldid=1352517" இலிருந்து மீள்விக்கப்பட்டது