பக்கம்:இன்னமுதம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 е இன்னமுதம் "அழகிய சிறகுகள் பொருந்திய இளங்கிளியே! வா; தேனையும் பாலையும் உண்ணுகின்ற முறைப்படி உனக்குத் தருகின்றேன்; நெருங்கிய பவளத்தோடு முத்தையும் பெற்றுள்ள துறைகளுடன் கூடிய கடலில் மிதக்கும் தோணிபுரத்து உறைபவனும், விளங்குகின்ற இளம் பிறைச் சந்திரனைச் சூடியவனும் ஆகிய இறைவனின் திருநாமத்தை எனக்கு ஒரு முறை சொல்லுவாயாக!”

(சிறை ஆரும்-சிறகுகள் பொருந்திய, மடக்கிளி- இளமை பொருந்திய கிளி; தரளம்- முத்து. தோணிபுரம்- ஊழிக் காலத்தில் உலக முழுவதும் நீருள் அமிழ்ந்துவிட, சீர்காழி மட்டும் மிதந்தது என்ற வரலாற்றால் அவ்வூருக்குத் தோணிபுரம் என்று பெயர் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/16&oldid=1516310" இலிருந்து மீள்விக்கப்பட்டது