இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குற்றாலம்
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை இரயில் நிலையத்தை அடுத்துள்ள திருக்குற்றால மலைக்குச் சென்ற ஞானசம்பந்தப் பிள்ளையார் அம்மலையின் இயற்கைக் காட்சியைக் கண்டு பாடுகின்றார்.
- வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்
- கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்