பக்கம்:இன்னமுதம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 в இன்னமுதம் நாள்தோறும் வழிபட்டுப் பணிவிடைகள் செய்து வருவதால், நெருப்பின் உருவினை உடையவனும், எல்லா பூதங்களுக்கும் நாயகனும், வேதத்தையும் பொருள்களையும் அருளினவனும் ஆகிய சொக்க லிங்கப்பெருமான், அழகிய கயல் கணி மீனாட்சியுடன் அமர்ந்த ஆலவாய் இதுவே அன்றோ" (வளவர்கோன் சோழன்; வரிவளை- வரிகளையுடைய வளைகள்:- மானி- மான ஆபரணன் என்று சோழருக்குப் பெயராதலால், சோழர் குடியில் பிறந்தவரை மானி என்று பேசுகிறார்; பங்கயச் செல்வி- தாமரையில் உறைகின்ற இலக்குமி, அங்கயற் கண்ணி- அழகிய மீன்போன்ற கண்ணை உடையவளாகிய மீனாட்சி.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/30&oldid=747032" இலிருந்து மீள்விக்கப்பட்டது