பக்கம்:இன்னமுதம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநல்லூர்ப் பெருமணம் சீர்காழியை அடுத்துள்ள திருநல்லூர் என்ற ஊரிலுள்ள நம்பாண்டார் என்பவரின் மகளை ஞானசம்பந்தர்க்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்கள். திருமண நாளில் திருமணம் செய்துகொண்ட புதுப் பெண்ணையும், திருமணத்தைக் காண வந்திருந்த அடியார்களையும் நல்லூர்ப் பெருமணம் என்ற அவ்வூர்க் கோயிலுக்கு அழைத்துச் சென்று ஆண்டவனை நோக்கி 'எனக்கு இம்மண வாழ்வு வேண்டா; உன் திருவடியே வேண்டும் என்ற கருத்தில் பிள்ளையார் பாடிய பாடல்கள் இவை: அன்புறு சிந்தைய ராகி அடியவர் - நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின்று இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே. "அன்பு நிறைந்த சிந்தையோடு கூடி, அடியார்கள், முக்தியைத் தருகின்ற நல்லூர்ப் பெருமணத்தில்உள்ள இறைவனை அடைந்து, நாளும் இன்பத்தைத் தருகின்ற எந்தையாகிய இறைவனின் திருவடிகளை ஏத்துபவர்கள் (அனைத்தும் அவனருள் என்ற கருத்தில்) தொண்டு செய்பவர்கள் ஆகலின் துன்பத்தை அடைய மாட்டார்கள்.” (நன்புறு-முக்தியை அடைவிக்கின்ற; நல்லூர்ப்பெருமணம்திரு நல்லூரிலுள்ள பெருமணம் என்ற திருக்கோயில்; 3,4ஆம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/31&oldid=747033" இலிருந்து மீள்விக்கப்பட்டது