பக்கம்:இன்னமுதம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் தேவாரம் திருமழபாடி நாட்டில் திருவாமூர் என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் புகழனார், மாதினியார் என்ற இரு வருக்கும் மகனாய்ப் பிறந்தவர் நாவுக்கரசர் என்னும் மருணிக்கியார் ஆவர். சைவராகப் பிறந்த இவர், இளமைப் பருவத்தில் உண்மையைக் காணக் கருதி மற்றொரு சமயத்தில் சேர்ந்து, அதனைக் காண முடியாமல் இறைவனால் சூலை நோய் (வயிற்று வலி) கொடுக்கப் பெற்று ஆட்கொள்ளப் பெற்றார். வயிற்று வலியைப் போக்கிக்கொள்ள ஏனைய வழிகள் பயன்படாமல் போகவே, நாவுக்கரசப் பெருமான் திருவதிகை வீரட்டானத்தில் வந்து சிவபெருமானைப் பாடி, இந்நோயைப் போக்கிக் கொண்டு, சிறந்த அடியாராகப் பல ஆண்டுகள் வாழ்ந்து, ஞானசம்பந்தர் முதலிய அடியார்களைப் பலமுறை சந்தித்து, உடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/33&oldid=747035" இலிருந்து மீள்விக்கப்பட்டது