பக்கம்:இன்னமுதம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் தேவாரம் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூர் என்ற ஊரில் புகழனார், இசை ஞானியார் என்ற இரு வருக்கும் மகவாய்த் தோன்றி வளர்ந்தவர் நம்பியாரூரர் ஆவார். பிற்காலத்தில் நம்பியாரூரரைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்று கூறத் தொடங்கினர். தம்முடைய திருமணத் தின்போது இறைவனால் தடுத்து ஆட் கொள்ளப் பெற்ற பெருமை வாய்ந்தவர் நம்பியாரூரர். தம்மை தடுத்து ஆட்கொண்ட இறைவனைத் திருவெண் ணெய் நல்லூரில் சென்று கண்டு பாடியதாகும் இப்பாடல். திருவெண்ணெய் நல்லூர் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் பண்ணுருட்டியை அடுத்துள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பாடல்கள் முழுவதும் ஏழாம் திருமுறையாக வகுக்கப்பெற்றுள்ளன. பித்தா பிறை சூடிபெரு மானேயருளாளா! எத்தான்மற வாதே நினைக் கின்றேன் மனத் துன்னை - வைத்தாய்ப் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூ ரருள்துறையுள் - அத்தா உனக் காளாய் இனி அல்லேன் எனலாமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/48&oldid=747051" இலிருந்து மீள்விக்கப்பட்டது