பக்கம்:இன்னமுதம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைக்குறிப்புகள்: அ. ச. ஞானசம்பந்தன் е 47 'பித்தனே! பிறையைத் தலை மாலையாகச் சூடியவனே! பெருமானே! அருள் உடையவனே ! . எந்நிலையிலும் மறவாமல் உன்னை நெஞ்சத்துள் நினைக்கின்றேன். அவ்வாறு நினைக்கும் வண்ணம் உன்னை என் நெஞ்சத்துள் வைத்து அருளினாய் ! பெண்ணையாற்றின் தென் கரையில் திருவெண்ணெய் நல்லூரின்கண் “அருட்டுறை” என்னும் திருக்கோயிலி னுள் எழுந்தருளியிருக்கும் எம் தந்தையே! முன்பே உனக்கு அடியவன் ஆகிவிட்டு இனி முடியாது என்று சொல்வது பொருந்துமா ?” (பித்தா- பித்துக்கொண்டவர்கள்; வேண்டியவர் வேண்டாதவர் என்ற வேறுபாடு பாராட்டாததைப் போல இறைவனும் வேண்டியவர் வேண்டாதவர் என்ற வேறுபாடற்று அருள் செய்கிறான் ஆதலின்’பித்தன் என்று கூறப்படுகிறான். பிறைசூடி- பிறைச்சந்திரனைத் தலையில் உடையவன்; மனத்து உன்னை வைத்தாய்- நம்பியாரூரர் உள்ளத்தில் இறைவன்தானே வந்து குடி புகுந்துள்ளான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/49&oldid=747052" இலிருந்து மீள்விக்கப்பட்டது