பக்கம்:இன்னமுதம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாலங்காடு நம்பியாரூரர் திருவொற்றியூரில் தாம் மணந்து கொண்ட சங்கிலியாரைப் பிரிந்து புறப்பட்டவுடன் இரண்டு கண்களையும் இழந்து, வழிப்போவார் வழி காட்ட ஒவ்வோர் ஊராகச் சென்று இறைவனைப் பாடிக்கொண்டு திருவாலங்காட்டை அடைந்து, காரைக்கால் அம்மையார் தலையால் நடந்த இடமாதலின், அவ்வூரினுள் தம் காலால் மிதித்து நடக்க அஞ்சித் துரத்தே நின்று பாடியதாகும் இப்பாடல்: (திருவாலங்காடு ஆர்க்கோணத்தை (Arkonam) அடுத்த புகைவண்டி நிலையமாகும்) முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையாள் உமைபங்கா சித்தா சித்தித் திறங்காட்டும் சிவனே தேவர் சிங்கமே பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா! பழைய னுர்மேய அத்தா:ஆலங் காடா!உன் அடியார்க் கடியேன் ஆவேனே. "இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கியவனே! உயிர்களுக்கெல்லாம் வீடு பேற்றைத் தர வல்ல உமாதேவியை இடப் பக்கத்தில் கொண்டவனே! சித்திகளை அடைவதற்குரிய வழிகளை அருளும் சிவ பெருமானே! தேவர்கட்குத் தலைவனே! அடியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/50&oldid=747054" இலிருந்து மீள்விக்கப்பட்டது