பக்கம்:இன்னமுதம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைக்குறிப்புகள்: அ. ச. ஞானசம்பந்தன் е 53 ஏனைய பெண்களைப்போலவே, முதலில் உள்ளத்தின் உள்ளேயே நினைந்து செய்யும் வழிபாட்டை முடித்து, அடுத்தபடியாக உமாதேவியானவள் பரமனைப் புறத்தேயும் வழிபடச் சென்று, அவ்வழிபாட்டில் நிலைத்ததைக் கண்டு, கம்பையாற்றின் கண் பெரு வெள்ளத்தைத் தோற்றுவித்து வெருட்ட, கொடி போன்ற வளாகிய உமை அஞ்சி ஒடித் தன்னைத் தழுவிக் கொள்ள, அதன் பின்னர் அவள் கண்ணெதிரே வெளிப்பட்டு நின்ற கள்வனாகிய திரு ஏகம்பனை, எங்கள் தலைவனைக் காணும் முறையில் அடியேன் கண் பெற்றது வியப்பேயாகும்.” உலகத்திலுள்ள பிற பெண்கள் இறைவனை வழிபடுவதைப் போலவே தாமும் இலிங்க வடிவில் இறைவனை வழிபட வேண்டும் என்று உமாதேவி நினைத்தார். காஞ்சியிலுள்ள கம்பையாற்றங்கரையில் மணலால் இலிங்கம் செய்து வழிபட்டார். அவருடைய அன்புப் பெருக்கை உலகிற்குக் காட்டுவதற்காக இறைவன் கம்பையாற்றில் வெள்ளம் வருமாறு செய்தான். உடனே உமாதேவியார் இலிங்கம் அழியாமல் இருப்பதற்காக அதைக் கட்டிப் பிடித்துக்கொண்டார், இறைவன் காட்சி தந்தான். (எள்கல் இன்றி- தன் வழிபாடு தேவை இல்லை என்று இகழாமல்; வழிபாடு செய்வாள் போல் - உலக உயிர்கட்கு வழிபாடு செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்ட, தானே வழிபடுபவளைப்போல்; உள்ளத்து உள்கி-மனத்தினால் செய்யும் வழிபாட்டை முடித்து; வழிபடச் செய்து நின்றவா கண்டு - முதலில் மன வழிபாட்டை முடித்துப் பின்னர் ஏனைய பெண்களைப்போல் இலிங்கத்தைச் செய்து வைத்துப் புற வழிபாட்டையும் செய்யத் தொடங்கினாள்; வெள்ளங்காட்டி வெருட்டி கம்பையாற்றின் கரையிலே உமை வழிபட்டாளாதலின் அவ்வாற்றில் இறைவன் வெள்ளம் வருமாறு செய்தான்.) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/55&oldid=747059" இலிருந்து மீள்விக்கப்பட்டது