பக்கம்:இன்னமுதம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் நம்பியாரூரர் காஞ்சிபூரத்தில் ஒரு கண்ணைப் பெற்று மெல்ல மெல்லத் திருவாரூர் சென்று இறைவனைப் பார்த்து மற்றொரு கண்ணையும் தர வேண்டுமென்ற குறிப்பை வைத்துப் பாடியதாகும் இப்பாடல் (திருவாரூர் தஞ்சை மாவட்டத்திலுள்ள புகழ்வாய்ந்த பதி ஆகும். மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தான் மிகவாடி ஆளாயிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே. திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானே ! உம்மை அன்றி பிறரை விரும்பாமலே, உமக்கே என்றும் மீளாத அடிமை செய்கின்ற ஆட்களாகி அந்நிலையில் பிறழாதிருக்கும் அடியார்கள் தங்கள் துன்பத்தை வெளியிட விரும்பாமல் மூடிவைக்கவும், அவர்கள் முக வாட்டத்தின் மூலம் பிறர் அறிகின்ற அளவு வெளிப்பட்டும், அந்நிலையில் அடியார்கள் உன்னிடத்தில் வந்து வாய் திறந்து தங்கள் துயரத்தை எடுத்துச் சொன்னால் அதனைக் கேட்டும் கேளாததுபோல் வாயை மூடிக்கொண்டு இருக்கின்றாய். இது உன்னுடைய இயல்பென்றால், நீ நன்றாக வாழ்ந்து போவாயாக!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/56&oldid=747060" இலிருந்து மீள்விக்கப்பட்டது