பக்கம்:இன்னமுதம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைக்குறிப்புகள்: அ. ச. ஞானசம்பந்தன் е 57 தானெனை முன்படைத்தான் அது அறிந்து தன் பொன்அடிக்கே நான் எனப் பாடல் அந்தோ நாயி னேனைப் பொருட் படுத்து வான் எனை வந்து எதிர்கொள்ள மத்த யானை அருள் புரிந்து ஊன் உயிர் வேறு செய்தான் நொடித் தான் மலை உத்தமனே. "இறைவன் தானே என்னை முன்னர் இந்நில உலகில் தோற்றுவித்தான். அவன் தோற்றுவித்த அவ்வருளிப் பாட்டினை நினைந்து அவனுடைய திருவடிகட்கு நான் எத்தனைப்பாடல்கள் பாடினேன்? அந்தோ! அப்படி மிகுதியாகப் பாடாமல் இருக்கவும், நாயாகிய என்னையும் ஒரு பொருளாக மதித்துத் தேவர் உலகெலாம் வந்து எதிர்கொள்ளுமாறு செய்து, மதம் பொருந்திய வெள்ளை யானையை வருமாறு அருள் புரிந்து, என் உடல், உயிர் இரண்டையும் சிறப்பு அடையுமாறு செய்தான், திருக்கயிலையில் இருக்கின்ற உத்தமனாகிய இறைவன்.” (தான் எனை முன் படைத்தான்- என்னைப் பிறக்குமாறு அவனே முன்னர் அருள் செய்தான்; அது அறிந்து- அங்ங்னம் அவன் அருள் செய்ததை அறிந்து; நான் என பாடல்- நான் எவ்வளவு பாடல்கள் பாடினேன்.) ஊழிதோறுழிமுற்று முயர் பொன்நொடித் தான்மலையைச் சூழிசை யின்கரும்பின் சுவை நாவலஊரன் சொன்ன ஏழிசை இன்றமிழால் இசைந் தேத்திய பத்தினையும் ஆழி கடலரையா! அஞ்சை யப்பர்க் கறிவிப்பதே. "உலகம் அழியும் காலந்தோறும் மேலும் உயர்ந்து காணப்படுவதும், பொன் போன்ற நிறமுடையதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/59&oldid=747063" இலிருந்து மீள்விக்கப்பட்டது