பக்கம்:இன்னமுதம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் மணிவாசகர் பாண்டி நாட்டில் வைகை ஆற்றங்கரையில் உள்ள திருவாதவூர் என்ற ஊரில் அவதரித்தவர் ஆவார். கல்வி கேள்விகளில் சிறந்திருந்தமையின் பாண்டிய மன்னனிடம் அமைச்சராய்ப் பதவி ஏற்றார். ஒரு முறை அரசனுக்குக் குதிரை வாங்கக் கொண்டு சென்ற அளவற்ற செல்வத்தைச் சிவபெருமானுக்குத் திருப்பெருந் துறையில் கோயில் எடுப்பதில் செலவு செய்துவிட்டார். இதனை அறிந்த மன்னவன் அவரை ஆற்றின் சுடு மணலில் நிறுத்தித் துன்புறுத்தித் தண்டித்தான். இறைவன் கருணையால் ©ᏈᎠ ❍1 ©Ꮘ) ē பெருகி மணிவாசகரின் பெருமையை உணர்த்தியது. மதுரையில் சொக்கப்பெருமான் மணிவாசகர் பொருட்டாக மண் சுமந்து பாண்டியனிடம் அடியும் பட்டார். இறுதியில் திருவாதவூரடிகளார் (மணிவாசகர்) திருவாசகம், திருக்கோவையார் என்ற நூல்களைப் பாடி இறைவன் திருவடி நிழல் எய்தினார். - பாணினைந் துட்டும் தாயினும் சாலப் பரிந்துநீ பாவியேனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/61&oldid=747066" இலிருந்து மீள்விக்கப்பட்டது