பக்கம்:இன்னமுதம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரம் திருமூல நாயனார் அருளிச் செய்த நூலே திருமந்திரம் எனப்படும். இவர் கயிலை மலையிலிருந்து வந்து மாயூரத்தை அடுத்துள்ள திருவாவடுதுறையில் வாழ்ந்தார். மூவாயிரம் பாடல்கள் கொண்டது திருமந்திரம். அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. "அன்பும் சிவமும் தனித்தனியான இரண்டு என்று கூறுபவர்கள் அறிவற்றவர்கள். அன்பே சிவமாவதை யாரும் அறியவில்லை; அன்பேதான் சிவமாயிற்று என்பதை அனைவரும் அறிந்து கொண்டபின் அவ்வாறு அறிந்தவர்கள் அன்பே சிவம் என்ற இரண்டற்ற நிலையில் அமர்ந்திருப்பார்கள்.” செம்புபொன் னாகும் சிவாய நமஎன்னில் செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரம் செம்பு பொன்னாகும் ரீயுங் க்ரீயுமென செம்பொன் னான திருவம் பலமே. "சிவாய நம என்னும் திருவைந்தெழுத்தை ஒதினால் செம்பு பொன்னாகும்; அவ்வண்ணம் செம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/66&oldid=747071" இலிருந்து மீள்விக்கப்பட்டது