பக்கம்:இன்னமுதம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினோராம் திருமுறை சேரமான் பெருமாள் நாயனார், காரைக்கால் அம்மையார் முதலிய அடியார்கள் பலரும் இயற்றிய அருள் நூல்கள் பதினோராம் திருமுறை என்ற பெயருடன் தொகுக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் பின்வரும் பாடலைப் பாடிய சேரமான் பெருமாள் நாயனார் சேர நாட்டில் மன்னராகத் திகழ்ந்தவர். நம்பியாரூரர் என்னும் சுந்தர மூர்த்திகளுடன் சம காலத்தில் வாழ்ந்து நண்பராகவும் இருந்து அவருடனேயே கயிலாயம் சென்றவர். இவருடைய பாடல்களுள் ஒன்றான பொன் வண்ணத்தந்தாதியில் உள்ள ஒரு பாடல் இதுவாகும். அந்தாதி என்பது ஒரு பாட்டின் ஈற்றடியிலுள்ள கடைசி சொல்லோ, சீரோ அன்றி அசையோ அடுத்த பாடலின் முதலடியாகத் தொடுப்பதேயாம். (அந்தம், ஆதியாக வருவது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/68&oldid=747073" இலிருந்து மீள்விக்கப்பட்டது