பக்கம்:இன்னமுதம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சென்னையை அடுத்துள்ள குன்றத்துாரில் தோன்றியவர் அருண்மொழித்தேவர் என்ற பெயருடைய சேக்கிழார். இவர் இரண்டாம் குலோத்துங்கன் என்னும் சோழப் பேரரசனிடம் அமைச்சராய் இருந்தவர். பின்னர் மண்ணாளும் செல்வத்தை வெறுத்து ஒதுக்கிவிட்டு இறைவனுடைய அடியார்கள் புகழைப் பாடும் திருப்பணியை மேற்கொண்டார். நம்பியாரூரர் முதல் சேரமான் பெருமாள் நாயனார் ஈறாக உள்ள அறுபத்து மூன்று சிவனடியார்களின் வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் என்ற பெயரில் பாடி அருளினார். நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்திகள் வரலாற்றில் வரும் பாடலாகும் இது. நம்பியாரூரார் சிதம்பரம் சென்று ஆடவல்ல பெருமானை எவ்வாறு கும்பிட்டார் என்பதை இப்பாடல் விவரிக்கிறது. ஐந்துபேரறிவும் கண்ணே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்து விகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப்பெரும் கூத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/70&oldid=747076" இலிருந்து மீள்விக்கப்பட்டது