பக்கம்:இன்னமுதம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைக்குறிப்புகள்: அ. ச. ஞானசம்பந்தன் е 71 உள்ள பாடலாரும். இன்றும் இளஞ் சிறுமிகள் மணலில் சிறு வீடு கட்டிக் கூட்டாஞ்சோறு ஆக்கி விளையாடு வதை நாம் அறிவோம். அவ்வாறு விளையாடும் பொழுது இளஞ்சிறுவன் அந்த மணல் வீட்டைத் தன் காலால் எற்றி அழித்து விடுவதையும் காண்கிறோம். “பொய்யா வளமை தரும்பெருமைப் பொருநைத் துறையின் நீராட்டிப் பூட்டுங் கலன்கள் வகைவகையே பூட்டி எடுத்து முலைஊட்டி மெய்யா லணைத்து மறுகுதனில் விட்டா ரவரைவெ றாமனலுனை வெறுக்க வேறு கடனுமுண்டே விரும்பிப் பரலைக் கொழித்தெடுத்துக் கையா லிழைத்த சிற்றிலைநின் காலா லழிக்கை கடனலகாண் காப்பான் அழிக்கத் தொடங்கில் எங்கள் கவலை எவரோடு இனிஉரைப்போம் ஐயா உனது வழியடிமை அடியேம் சிற்றில் அழியேலே அலைமுத் தெறியும் திருச்செந்தூர் அரசே சிற்றில் அழியேலே.” "என்றும் தப்பாத வளமையைச் செய்யும் பெருமை யுடைய தாம்பிரவருணித் துறையில், உனக்கு நீராட்டி, அணியத்தக்க அணிகள் அனைத்தையும் முறையாக அணிவித்து, பாலூட்டி, உடம்போடு சேர்த்து அனைத்து, முத்தம் தந்து, தெருவில் உன்னை விளை யாட விட்டவரைக் குறை கூறாமல், உன்னை வெறுத்துக் கொள்வதால் என்ன பயன் விளையப்போகிறது? இளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/73&oldid=747079" இலிருந்து மீள்விக்கப்பட்டது