பக்கம்:இன்னமுதம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 е இன்னமுதம் சிறுமிகளாகிய நாங்கள்) விருப்பத்துடன் பரற் கற்களைக் கொழித்து எடுத்து சுவர் முதலியன வைத்துக் கையால் கட்டிய எங்கள் சிறு வீட்டை உன்னுடைய காலால் அழிப்பது முறையன்று கண்டாய். காக்கும் கடமையுடைய நீயே அழிக்கத் தொடங்கி விட்டால் எங்கள் கவலையை இனி யாரிடம் முறையிட முடியும்? ஐயா! பரம்பரை பரம்பரையாக உனக்கு அடிமைப் பட்டுள்ளோம். அப்படிப்பட்ட அடியார்களாகிய எங்கள் சிறு வீட்டை அழிக்க வேண்டா! கடலலைகள் முத்துச் சிதறும் திருச்செந்தூருக்குத் தலைவா! அடியேம் சிறு வீட்டை அழிக்காதே." (பொய்யா மாறாத பொருறை-தாம்பிரவருணி, கலன்கள். நகைகள்; மறுகு- தெரு, பரல்- பரற் கற்கள்; சிற்றில்- சிறு வீடு; வழியடிமை- பரம்பரையான அடியவர்கள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/74&oldid=747080" இலிருந்து மீள்விக்கப்பட்டது