பக்கம்:இன்னமுதம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

● 7



பொன்போன்ற பழமையைப் போற்றிப் பாதுகாக்கும் புத்துணர்வு இன்று தமிழ் மக்களிடம் வளர்ந்து வருகிறது. அந்த உணர்வின் அடிப்படையில் இந்தப் பக்திப் பாடல்களையும், பண்முறைகளையும் நாம் பாதுகாக்க வேண்டியவர்களாவோம். நமக்காக மட்டுமின்றி, குறிப்பாக வருங்காலச் சந்ததியை நினைவில் வைத்து நாம் இதைச் செய்ய வேண்டும். நமது குழந்தைகள் தெய்வ பக்தி உள்ளவர்களாக வளரவேண்டும். அவ்வாறு வளர்ப்பது நமது கடமை. அந்த எண்ணத்தைச் செயலாக்கும் பொருட்டு, பன்னிரு திருமுறைகளிலிருந்து சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை, ஓதுவார்கள் என்று சொல்லப்படும் இசைவாணர்களைக் கொண்டே பாட வைத்து இசைத்தட்டுகளாகத் தயாரிக்கும் பணியில் பெரியோர்கள் பலர் ஈடுபட்டனர்.

தமிழ்ப் பேரறிஞர் திரு.அ.ச.ஞானசம்பந்தன் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, ஒலிப்பதிவு செய்ய உதவியதுடன் குழந்தைகளை மனத்தில் கொண்டு எளிய முறையில் இப்பாடல்களுக்கு உரை எழுதித் தந்துள்ளார். மேலும் திரு.எஸ். இராமநாதன் பாடல்களின் இசை அமைப்பை சுரப்படுத்தி உதவியுள்ளார். (இந்நூலின் ஈற்றில் அது சேர்க்கப்பெற்றுள்ளது.)தருமபுரம் திரு.பி.சுவாமிநாதன், சீர்காழி திரு. எஸ். திருஞான சம்பந்தன், திருக்களர் திரு.டி.சுந்தரேச தேசிகர் ஆகியோர் பக்தி மணம் கமழப் பாடல்களைப் பாடியுள்ளனர். இவ்வாறு இப்பயனையும், மக்கள் - குறிப்பாகக் குழந்தைகள்- அடைய வேண்டுமென்ற நோக்கத்துடன், பாடல்களுக்கான பொருளையும் பிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/9&oldid=1350866" இலிருந்து மீள்விக்கப்பட்டது