பக்கம்:இன்னொரு உரிமை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பெண்மைக்கு முதுமை இல்லை

“நான் ஒருத்தி இருக்கேன்.

அந்த வீட்டுக் காம்பவுண்ட் கேட்டைத் திறந்து மூடிய சத்தத்துடன் சத்தமாக பாட்டியின் கோபச் சத்தத்தையும் கேட்ட, ராமநாதன் தாத்தாவுக்கு பதில் கோபம் வர வில்லை. பதிலளிக்க வேண்டும் என்றும் தோன்றவில்லை. சந்தோஷம் தாங்காதவர்போல், அவர் தனது முதுகுபோல் முன்னுக்கு வளைந்த கைத்தடியைத் தூக்கி, சிலம்பம் ஆடப் போகிறவர்போல் லேசாய் சுற்றியபடியே பாட்டியையே பார்த்தார். “எப்பா... இந்த மாதிரி உறவுக்குக் கை கொடுத்து உரிமைக்குக் குரல் கொடுக்கும் இவளை இதே தோரணையில் பார்த்தும், கேட்டும் எவ்வளவு நாளாச்சு... பத்து வருஷம் இருக்குமா... கூடவே இருக்கும். எப்போ பேரன் பிறந்தானோ அப்பவே என்னை விட்டுட்டாள். கண்டுக்காம விட்டுட்டாள். அந்தப் பயலுக்கே இப்போ பன்னிரெண்டு வயசு.

தாத்தா, முன்னறையில் முக்கால் பகுதியை வியாபித்த சோபா செட்டில் உட்கார்ந்து கைகளை விரித்துப் போட்ட படியே பாக்கியம் பாட்டியைப் பார்த்தார். பாட்டி பொறிந்தாள். ஏதோ சேதி சொல்லப்போனவரை வழி மறித்துக்கேட்டாள்.

சி.-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/10&oldid=1369468" இலிருந்து மீள்விக்கப்பட்டது