பக்கம்:இன்னொரு உரிமை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமதேனு95


போடாமல் திருவல்மேல் உட்கார்ந்து இருப்பதை அதிசயமாகப் பார்த்தாள். பின்னர் நடுமுற்றத்திற்கு வந்து நின்ற படி, அவனிடம் கேட்டாள்.

"புல்லை எடுத்து கன்றுக்குட்டிக்குப் போட்டா என்னடா?"

"போட்டா போச்சு! என்ன அவசரம்."

"ஏண்டா ஒருமாதிரி இருக்கே!"

"ஒண்ணுமில்லே!"

"சரி... கஞ்சி குடிக்க வா!"

"கஞ்சியும் வேண்டாம், கிஞ்சியும் வேண்டாம்."

திருமலையம்மா, மகனையே பார்த்தாள். இப்போது 'பாரும்மா! உன் மகன் என்னைப் பார்க்கமாட்டேங் கிறான்' என்பதுமா திரி அவளிடம் முறையீடு செய்வதுபோல் கன்றுக்குட்டி "ம்மா... ம்மா..." என்று கத்தி தாயையும் மகனையும் மாறி மாறிப் பார்த்தது. அதன் வயிறு 'கொலுக்காய்' கிடப்பதைப் பார்த்தாள் திருமலையம்மா. உரக்கக கத்தினாள்.

"ஏய் கமலசுந்தரி எங்களா தொலைஞ்ச?"

அண்ணனை புல்கட்டோடு பார்த்ததும், வீட்டுக்கு வெளியே வேப்பமரத்தடியில் பதுங்கிக் கொண்டிருந்த கமலசுந்தரி, இருக்கவும் முடியாமல் எழுந்திருக்கவும் முடியாமல் தவித்தாள். "சீக்கிரமா தோட்டத்துக்கு வா... இரண்டு பேருமா சேர்ந்து புல் வெட்டினால், கொஞ்சத்தை விக்கலாம்"முன்னு அண்ணன் சொல்லிவிட்டு அதிகாலையிலேயே போய்விட்டான். அவளுக்கு ஏனோ போக மனமில்லை. அதுவும் 'ப்ளஸ் டூ' படித்துவிட்டு தோட்டத்துக்குப் பூய் பறிப்பதற்குப் போவதற்குப் பதிலாகப் புல் பறிக்கப் போக அவளுக்கு மனமில்லை. அண்ணனிடம் சொல்லவும் பயம், பொதுவாய் 'உம்' என்றாள். ஆனால் போகவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/104&oldid=1369359" இலிருந்து மீள்விக்கப்பட்டது