பக்கம்:இன்னொரு உரிமை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98  சு. சமுத்திரம்


ராமய்யா மவனும்... மொச்சைக் கொட்டை மவன் பிள்ளை யாரும், சும்மா கரையிலே நின்னு, என்னைப் பார்த்து முகத்தை ஆட்டி ஆட்டி காட்டி இளக்காரமா சிரிச்சாங்க, அப்புறம் மெட்ராஸ் பயல் தங்கமுத்து பேண்ட் சட்டை போட்ட திமிர்ல "என்னடா மேளத்தைத் தலையிலே சுமந்துகிட்டுப் போறேன்'னு கேட்கிறான். என் தலைவிதி, இந்தப் பயலுக்கு நான் இளக்காரமா போயிட்டேன்!"

திருமலையம்மா கொதித்துக் கேட்டாள், அவள் போட்ட கூச்சலில் இரு காதுகளிலும் தொங்கிய தடயங்கள்" குதித்துக் குதித்து ஆடின.

"யாரு...ஊர்லே இருந்து ஆட்டுக்குட்டியை தூக்கிட்டுப் போய், சந்தையிலே வித்துட்டு மெட்ராசுக்கு ஓடுனானே... அதாண்டா... தெக்குத் தெரு கடாயை திருட்டுத்தனமா பிடிச்சுட்டு ஓடுன அந்தப் பயலா உன்னைப் பார்த்து இந்த மாதிரிக் கேள்வியை கேட்கிறான்? நீ அதுக்கு என்ன பதில் சொன்ன?"

"என்னத்த சொல்ல... என்னோட நிவமை அவனை அப்படிச் சொல்ல வைக்குது!"

"ஏமுலே பேசாம வந்த? இந்த உடம்ப வச்சுக்கிட்டு சும்மாதான் வந்தியாக்கும்... அந்த வந்தட்டி பய மவனே" நாக்குப் பிடுங்கிறது மாதிரி நாலு வார்த்தை கேட்காமல் பேசாமல் வந்துருக்கான் பாரு!"

"இந்தப் பயலுகளுக்கு சொல்லிக் காட்டப்படாது. செய்து காட்டணும். கடவுளா பார்த்துத்தான் அண்ணனை இந்த மாதிரி லெட்டர் எழுத வச்சுக்கிறார்... இனிைக்கே மெட்ராஸ் போகப் போறேன்... மளிகைக் கடை போட்டு, இல்லேன்னா கோணிக் கடை போட்டு, இந்தப் பயலுக கண்முன்னாலே பேண்டும், சட்டையும் உடுத்தி வரேன பாரு! நம்மளாலே ஒரு நொடிகூட இந்த ஊர்லே இருக்க முடியாது!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/107&oldid=1369335" இலிருந்து மீள்விக்கப்பட்டது