பக்கம்:இன்னொரு உரிமை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106சு. சமுத்திரம்

மாம். டைப்பிங்லே சேரணுமாம். அண்ணன் எனக்கு வேலை வாங்கிக் கொடுத்துடுவானாம். டிக்கெட்டுக்கும் சேர்த்து பணம் அனுப்பியிருக்காங்க. நாளைக்கு வடக்கு தெரு சீமையம்மா மகனைப் பார்க்க மெட்ராஸ் போகப் போறாங்களாம். நானும் அவங்களோடு போகணுமாம். முடியும்னா உன்னையும் கூட்டிக்கிட்டு வரச்சொல்லி எழுதியிருக்காங்க.”

அம்மாக்காரி கத்தினாள்.

“ஒன்னாலேயும் முடியாது. என்னாலேயும் முடியாது”ன்னு எழுதிடு. என்ன நினைக்காங்க! முட்டாப் பயலுவ! ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்க துப்பில்ல. வேலை பார்த்துக் கொடுப்பாங்களாம்... வேலை. அம்மாவுக்குத் தண்ணி கொண்டு வாளா...”

கமலசுந்தரி ஒரு சொம்பு தண்ணீரோடு அம்மாவை நெருங்கினாள். அம்மாவிடம் சாவகாசமாகக் கேட்டாள்:

“அப்படின்னா நீ வரலியாம்மா...”

“நீ சொல்றத பார்த்தால்...”

“நானும் மெட்ராஸ் போறதுன்னு தீர்மானிச்சுட்டேன்! ஒனக்காகத்தான் காலையில இருந்து காத்திருக்கேன்! சீமையம்மாவ பார்க்கணும்.”

“நீயே ஒரு முடிவுக்கு வந்தபிறகு எனக்கு எதுக்காவ காத்திருக்கணும்!”

“என்னம்மா நீ! உன்ன மாதிரியே நானும் இந்த மண்ணுல புரண்டு, வயலுல விழுந்து உருப்படாமப் போவணுமா? படிச்சதுக்கு அர்த்தமில்லாமல் கிடக்கணுமா? யோசித்துப் பாரு. எனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைக்க வேண்டாமா. மெட்ராஸ்லே டைப் கத்துக்கிட்டா நல்ல வேலையாவது கிடைக்கும். இந்த வீட்டையும் மாட்டையும் எத்தனை நாளைக்குச் சுத்தறது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/115&oldid=1368640" இலிருந்து மீள்விக்கப்பட்டது