பக்கம்:இன்னொரு உரிமை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமதேனு107

“இந்த ரெண்டோடு என்னையும் சேர்த்துக்கடி. என்னை ஏன் விட்டுட்டே... சொல்லுரதை நல்லா கேளுடி. என் தலை கீழே விழுந்தாலும், நான் வரமாட்டேன். சிங்கத்துக்கு வாலாய் இருக்கிறதைவிட, நாய்க்குத் தலையாய் இருக்கிறதே மேல். இதத்தான் நான் விரும்புறேன்!”

“எதை வேணுமின்னாலும் விரும்பு. நான் போகக் கூடாதுன்னு மட்டும் விரும்பாத. சரி, சீமையம்மா வீட்டுக்குப் போயிட்டு வரேன்! எனக்குச் சேர்த்து டிக்கட்டு எடுக்கும்படி பணம் கொடுத்துட்டு வரணும்.”

திருமலையம்மா திகைத்தாள். கடைசி பெண் என்பதால் மூன்று வயது வரைக்கும் தன்னிடம் பால் குடித்த மகள் காட்டிய முதுகையே பார்த்தாள். அவளை மாதிரியே உடல்வாகு. பவுன் நிறம். அச்சடித்தது போன்ற உடம்பு. மகள்காரி, தன்னைத் திரும்பிப் பார்க்காமலே வாசலைத் தாண்டி குதித்து, எம்பி நடப்பதைப் பார்த்தாள். திருமலையம்மாவுக்கு எல்லாமே பொய்யாய், பழங்கதையாய் மாயையாய் தோன்றின. வீடு மட்டும் அல்ல. தானும் வெறுமையாகத் தெரிந்தது. தனிமையில் தவித்தாள். மனதில் இனம் தெரியாத பயம் கவ்விக்கொண்டது. மகள் அப்போதே போய் விட்டதுபோல், அவள் உள்ளம் சூனியப்பட்டது; தலையில் கை வைத்தாள். எவ்வளவு நேரம் ஆடாமல் அசையாமல் இருந்தாளோ... திடீரென்று ஒரு குரல் அவளை ஆட்டுவித்தது.

“ம்மா... ம்மா... ம்மா...”

திருமலையம்மா, கன்றுக்குட்டியைப் பார்க்கிறாள். முட்டுகளில் கை ஊன்றியபடியே எழுந்து, முற்றத்திற்கு வந்து, கொஞ்சம் புல்லை உருவி தொழுவத்திற்குப் போகிறாள். கன்றுக்குட்டியின் வாயில் அதைத் திணிக்கிறாள். அந்த பேசத் தெரியாத உயிரோ புல்லைத் தின்னாமல், அவளையே பார்க்கிறது. அவள் கையை முகர்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/116&oldid=1368666" இலிருந்து மீள்விக்கப்பட்டது