பக்கம்:இன்னொரு உரிமை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108சு. சமுத்திரம்

கிறது. முகத்தை நகர்த்துகிறது. அவள் முகத்தை நாக்கால் தடவுகிறது. “ஒருநாள் முழுவதும் நீ எங்கே போனே” என்பதுபோல் அவளை மாறி மாறி செல்லமாகப் பொய் முட்டு முட்டுகிறது.

திருமலையம்மாவுக்கு அந்தக் கணத்தில், எல்லாமே மறக்கின்றன. சூனிய மனதிற்குள் சுக்கிலபாசம் பாய்கிறது. அவள் தாய்மையைத் தூண்டுகிறது. மறுபிறவி எடுக்காமலே, அவளைக் காமதேனுவாக்குகிறது. இதுவும் நான் பெறாமல் பெத்த பிள்ளை—என்னைவிட்டுப் போக நினைக்காத பிள்ளை. போக மறுக்கும் பிள்ளை.

திருமலையம்மா அந்தக் கன்றுக்குட்டியின் கழுத்தை தன் முகத்தோடு சேர்த்துக்கொள்கிறாள். கண்ணீரால் அதன் முகத்தைக் குளிப்பாட்டுகிறாள். அதன் நெற்றியிலும், கழுத்திலும் மாறி மாறி முத்தமிட்டுக்கொண்டு இருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/117&oldid=1368683" இலிருந்து மீள்விக்கப்பட்டது