பக்கம்:இன்னொரு உரிமை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112சு. சமுத்திரம்

“இந்தா பாரு தாயீ... சும்மாப் பூடகமாப் பேசாத... நீ கல்யாணம் ஆயி ஊருக்கு வந்த புதுப்பொண்ணு. அதனால் தான் தராதரம் தெரியாம அப்படிப் பேசற. தராசும் படியும் ஊருல. வேணுமின்னா என்னைப்பத்தி ஊருல கேட்டுப் பாரு... ஆஸ்துமா கோளாறு... ஊதக்காத்துல மேல்மூச்சும் கீழ்மூச்சும் ஒண்ணா முட்டுது. புறாக் காத்துப் பட்டா கொஞ்சம் சொகம் கிடக்கும். அதுக்காவ வந்தேன். வேணாமின்னா போயிடறேம்மா...”

கும்மாளம்மாவுக்கு என்னவோபோல் இருந்தது. ஊருக்கு வந்திருக்கும் களக்கூத்தாடிகளில் ஒருவன் கையில் நேற்றொரு புறா இருந்ததாக நாத்தனாக்காரி சொன்னதும் நினைவுக்கு வந்தது. உடனே அவரிடம் “ஒக்காருவதுக்கு மணக்கட்டத் தரட்டுமா” என்றாள். எழப்போன அந்தப் பெரியவர் மீண்டும் உட்கார்ந்துகொண்டே அவளை அன்போடு பார்த்துக்கொண்டு பேசினார்.

“அதோ கோழிக்கூண்டுக்கு பக்கத்தல ஒரு புடவச்சிருக்கே! அது என்னன்னு தெரியுமா? தெரியாதுன்னா தலையாட்டுற? இறப்பாளி பய மவளே... கீரி பூமிக்குக் கீழே கால்வாய் மாற்றி குடஞ்சிட்டுகிட்டு வருது. கோழிக்கூட்டுக்குள்ள கீழே இருந்தே கன்னம் வச்சி ராத்திரிக்கு ஒரு கோழிய கவ்விக்கிட்டுப் போறதுக்குப் பிளான் போட்டிருக்கு. இது தெரியாம என்னமா கோழிப்புறா வளக்க? பேசாம தாத்தாக்கிட்ட ஒரு மம்புட்டிய கொடு. கீரி பிள்ளையா இருந்தா ஒரே வெட்டா வெட்டறேன். இல்லாட்டாலும் அந்தப் புடைய வெட்டிப் போடறேன்!”

கீரியின் தந்திரத்தால் சிறிது அசந்து, பிறகு ஆத்திரப்பட்ட கும்மாளம்மா மண்வெட்டியை எடுக்கப் போனாள். இதற்குள் எல்லாப் புறாக்களும் வடக்கு நோக்கிப் பறந்தன. அவளது செல்லப் புறா மட்டும் அவள் வீட்டு ஓட்டுக்குத் தாவி அவளையே பார்த்தது. அவள் ‘வந்துவிடு வந்துவிடு’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/121&oldid=1368768" இலிருந்து மீள்விக்கப்பட்டது