பக்கம்:இன்னொரு உரிமை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114சு. சமுத்திரம்

உடனே அந்தப் புறாவும் சிறிதுநேரம் அந்த விழுதில் இருந்துவிட்டு அங்கே வந்து பக்கத்தில் அமர்ந்தது. இறக்கைகளைத் தூக்கிக்கொண்டு செந்துாரம் தெறித்தது போன்ற உடம்பைக் காட்டிகொண்டு கழுத்தை அறைவட்டமாக்கிக் கொண்டு “கெக் கெக்” என்று ஒலி எழுப்பிக்கொண்டே இருந்தது.

கும்மாளம்மாவின் செல்லப் புறா ஏறிட்டுப் பார்த்தது. அந்த ஆண் புறா எழுப்பிய ஆண்மைச் சத்தமும் கம்பீரப்பட்ட முகமும், நீண்ட கீழ் அலகை நீட்டி குட்டையான மேல் அலகைத் தூக்கி, ஜோதியான நாக்கை அங்குமிங்கும் ஆட்டிய அதன் தோரணையில் இதற்குக் கிறக்கம் வந்தது. இதுவரை கண்டிராத இன்ப அதிர்வுகள் உடலெங்கும் வியாபித்தன. இப்போதுதான் இது ஆண் புறா ஒன்றைப் பார்ப்பதாக அர்த்தமில்லை. கூண்டிலும் இரண்டு பிரம்மச்சாரிகள் உள்ளன. ஆனால் ஆண்கள் என்றாலும் அசல் பொட்டைகள். இதேபோல் காட்டுப் பெண் புறாக்களில் முரட்டுத்தனத்தைக் கண்ட அந்த ஆண் புறாவிற்கும் இந்த ‘குடும்பப்பாங்கான’ புறாவைப் பார்த்ததும், ஒரு மயக்கம் ஏற்பட்டுவிட்டது. மீண்டும் ‘கெக்கெக்’ என்று ஆண்மையை வெளிப்படுத்தும் கம்பீரச் சத்தத்தை எழுப்பியது. பிறகு மெல்ல மெல்ல தனது இறகைத் தூக்கி கும்மாளம்மா புறாவின் கழுத்தில் லேசாய்த் தடவியது. அதற்கு உடன்பட்டதுபோல் கும்மாளம்மாவின் புறா, சும்மாயிருந்த மெளனச் சம்மதத்தால் அந்தக் காட்டுப்புறா அதை நெருக்கியடித்துக் கால்மேல் கால்சாத்தி, கழுத்துமேல் கழுத்தைப் போட்டு அதன் அலகை தனது அலகால் தடவிவிட்டுக் கொண்டிருந்தது.

எதிர்பாராது கிடைத்த இந்த காதல் அனுபவத்தில், இரண்டு புறாக்களும் முகங்களை ஒட்ட வைத்துக்கொண்டு அங்குமிங்குமாய் பார்த்தன. புல் தரையில் உட்கார்ந்திருந்த அவற்றிற்குப் புல்லிதழ்களில் காதலர்களின் வருகைக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/123&oldid=1368825" இலிருந்து மீள்விக்கப்பட்டது