பக்கம்:இன்னொரு உரிமை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் புறாக்கள்119

காட்டுப்புறா, காதலியிடம் விடை பெறப்போவது போல் இறுதியாகப் பார்த்துவிட்டு மாமரத்திலிருந்து ஒரு புன்னை மரத்தில் உட்காருகிறது. இதைத் தாளமுடியாத புறாச்சிறுசு அங்கே அதன் முன்னால் போய் வழிமறிக்கிறது. தனது கழுத்தால் அதன் அலகை தாங்கிக்கொள்கிறது. ஆனாலும் அந்த ஆண்புறா பிடிவாதமாகக் காட்டுப்பகுதியையே பார்ப்பதைப் பார்த்து இதற்கு அழுகை வருகிறது. அவலம் ஏற்படுகிறது. ‘என்னோடு வா’ என்று காதலன் கூப்பிடுவது அதற்குக் கேட்கிறது. ஆனாலும் கும்மாளம்மாவை விட்டுப் பிரிய அதற்கு மனமில்லை. புறாத் தோழர்களை விட்டு நீங்கவும் இஷ்டமில்லை. இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரியான நிலைமை. மனதை கல்லாக்கிக்கொண்டு மீண்டும் அந்தக் கூட்டின் மேல் உட்காருகிறது. பிறகு அதன் வாசல் வழியாக உள்ளே புகுகிறது. அந்தப் புறாவிற்கு மீண்டும் ஒரு தடவை அழைப்பு விடுக்கிறது. பிறகு முதல் தட்டின் மத்தியிலுள்ள தனது பலகை வீட்டில் குதித்து ஏறிக்கொள்கிறது. அந்த ஆண்புறாவைப் பார்த்து ‘இதுதான் என் வீடு! நீயும் ஏன் இதை உன் வீடாக்கிக் கொள்ளக் கூடாது?’ என்பதுபோல் பார்க்கிறது. பிறகு அது வராது என்று அனுமானித்து அதற்கு முகத்தை மறைக்கும் வகையில் பின்பக்கமாகத் திரும்பித் தலையை அங்குமிங்கும் ஆட்டுகிறது. தாளாத சோகச்சுமையை தட்டின் மரச்சுவரில் சாய்க்கிறது.

அந்த ஆண் புறா திரும்பிப் பாராமல் பறந்தது. அப்போது கூட்டுக்குள்ளிருந்த வீட்டுப் புறா இறக்கைகளைத் தட்டி மாரடித்தது. இதற்குள் ஒரே பாய்ச்சலாய் ஆகாயத்தில் பறந்த ஆண்புறா மீண்டும் அங்குமிங்குமாய்ப் பறந்தது. ஒரு கோழியை ஒருத்தன் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு போவதைக் கண்டு திகைத்தது. நாலைந்து பெண்கள் ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரிக்கொண்டு காட்டுக் கத்தலாகக் கத்துவதைப் பார்த்துப் பயந்தது. நாலைந்து சிறுவர்கள் புட்டான்களை நூலில் கட்டி அங்குமிங்குமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/128&oldid=1368930" இலிருந்து மீள்விக்கப்பட்டது