பக்கம்:இன்னொரு உரிமை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128சு. சமுத்திரம்

“அதிர்ந்து பேசமாட்டார். பெர்பெக்ட் ஜென்டில் மென்!”

“ஒங்களுக்குத் தெரியுமா மேடம் மனைவிகிட்ட எந்த கணவனும் ஜென்டில்மேனாய் இருக்க முடியாது! இருக்கப்படாது... டு யு அண்டர் ஸ்டாண்ட்.”

லட்சுமிக்கு அண்டர்ஸ்டான்ட் ஆகாததால், அவள் மேஜைமீது ஏறியிருந்த ஒரு ஸ்டாண்டில் உள்ள அலங்காரப் பொருளைப் பார்த்தாள். ரமா புரிந்துகொண்டவள்போல், லட்சுமியைச் சங்கடத்தோடு பார்த்து அவனை சலிப்போடு பார்த்தாள். சேகர் உதட்டைக் கடித்தான். பிறகு “மேடம்! நான் ஒரு லேட்டர் பாக்ஸ் உள் அர்த்தம் வச்சுப் பேச வராது” என்று சொல்லி தன் பேச்சின் உள்ளர்த்தத்தைக் கோடிட்டுக் காட்டினான்.

திடுக்கிட்டவள்போல் கூந்தலைப் பிடித்த ரமா, மீண்டும் சகஜமானவள்போல லேசாகச் சிரித்தாள். பிறகு “டிரிங் கூலா... ஹாட்டா வேணுமா” என்றாள்.

“கூலா பேசாமலும், ஹாட்டாய் வெடிக்காமலும் இருக்கிங்களே! அதுவே எனக்குப்போதும்” என்று சேகர் சொல்லிவிட்டு, தான் சொன்னதைப் புரிந்துகொண்டாளா என்பதுபோல் ரமாவைப் பார்த்தான். அவள், லேசாக உட்சிரிப்பாகச் சிரித்துவிட்டு உள்ளே போனாள்.

ரமா டிரேயில் குளிர்பானம் கொண்டு வந்தாள். அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, தனக்கும் எடுத்துக்கொண்டாள். சேகர் கொடுத்ததை அவள் உதட்டைப் பார்த்தே பருகிக் கொண்டே, “மேடம், செல்பில நிறைய புத்தகம் இருக்கே” என்றான்.

“நான் நிஜமாகவே படிக்கிறவள் ஸார்! அழகுக்கு அடுக்கி வைக்கல.”

“இஸ் இட்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/137&oldid=1388280" இலிருந்து மீள்விக்கப்பட்டது