பக்கம்:இன்னொரு உரிமை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைக்குனிவு 135

துலேயே, ஒன் வீக்பாயிண்டை புரிஞ்சுட்டேன்! ஒன்னை நீ டிலேய் பண்ணமுடியும்; டினை பண்ண முடியாது. இது சவால் மேடம்!

சேகர் தன்னையறியாமல் சிறிது சத்தம் போட்டுக்கூட கத்தினான். தெரு மூலைக்குப் போனவன் அவள் வாசலிலேயே நிற்பதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு திரும்பிப் பார்க்க விரும்பாதவன் போல் நடந்தான். அலுவலகத்திற்கு வந்ததும் கேம்பில் செய்யவேண்டிய வேலைகளுக்கு ‘பைல்’களைத் தேடி ஒன்றுசேர்த்தான். அப்படியும் இப்படியுமாய் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. ரயில் நிலையத்திற்குப் புறப்படப் போகிற நேரம். ஆக்ரா கேன்டோன்மென்ட்டில் ஏற்பட்ட ரயில் விபத்தால் அவனை இப்போது வரவேண்டாம் என்று தில்லியிலிருந்து டெலக்ஸ் செய்தி வந்தது.

சேகர் வீட்டைப் பார்த்துப் புறப்பட்டான். வழியில் ஒரு சினிமா தியேட்டர். ‘பெண்களை வசப்படுத்துவது எப்படி?’ என்ற தலைப்பு. ‘மென் அண்ட் உமன்’ என்ற ஆங்கிலப் படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, சேகருக்கு ஒருவேளை, தானும் இந்த விவகாரத்தில் கற்க வேண்டியது ஏதாவது இருக்கலாம் என்று நினைத்தான். அதோடு, அங்கேகூட, இந்த ரமாவைவிட அழகான ஒருத்தி கிடைக்கலாம்.

தியேட்டர் கவுண்டரில் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு உள்ளே போனான். வெளிச்சம் விலகிக்கொண்டிருந்த சமயம், ஒளியை இருட்டு விழுங்கிக் கொண்டிருந்த வேளை; இனிய நாதத்தை ‘நொய்ங் நொய்ங்’ சத்தம் துரத்திக் கொண்டிருந்த நேரம். அப்போது பழக்கப்பட்ட குரல்களைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தான், அவன் இருந்த இடத்திற்கு முன்வரிசையில்-

லட்சுமியும், கோபாலும் ஒருவர் தலையில் இன்னொருவர் தலைபட, ஒருவர் தோளில் இன்னொருவர் கை பட...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/144&oldid=1388102" இலிருந்து மீள்விக்கப்பட்டது