பக்கம்:இன்னொரு உரிமை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148  சு. சமுத்திரம்


பிறகு. அதை அப்படியே ஒளிரவிட்டு வெளியே வந்தார். ஒயர் கொடியில் தொங்கிய தேய்க்காத சட்டையைப் போட்டுக் கொண்டே மகளிடம் வந்து, படுத்துக் கிடந்தவளைத் தூக்கி நிறுத்தினார்.

"எழுந்திரும்மா போகலாம். ஆரம்பம் போலீஸ் ஸ்டேஷன்! அப்புறம் எதுவரைக்கும் வேணுமுன்னலும் போகட்டும். ஒன்னை மகளாய் நினைச்சுக் கூப்பிடலே. அம்பாளாய் நினைச்சுக் கூப்பிடுறேன். எழுந்திரு நாமார்க்கும் குடியல்லோம் எழுந்திரும்மா... ஆமாம் இப்படித்தான் எழுந்து நிற்கணும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/157&oldid=1369289" இலிருந்து மீள்விக்கப்பட்டது