பக்கம்:இன்னொரு உரிமை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுமைதாங்கிகள்157

பக்கவாத நோயைப் பற்றிச் சொல்லி, மகனுடைய அரசாங்க வேலையைச் சுட்டிக்காட்டி விவாகத்திற்குப் பிறகு, வேலையில் இருக்கமுடியாது என்று சொல்லிவிட்டார். இவளுக்கும் சம்மதம்தான். ராணி மாதிரி வந்து கடைசியில் தேனி மாதிரி... சீ... சீ... உழைத்ததை சொல்லிக் காட்டக்கூடாது. மனசுக்குள்ள கூட...

சுலோச்சனா உள் அறைக்குள் போனாள்.

அம்மா அலங்காரம் செய்வதற்குப் பதிலாகத் தனக்குத் தானே சிங்காரித்துக் கொள்ளவேண்டிய நிலைமை ஏற்பட்டதற்காக மல்லிகா கத்தினாள்:

“நாத்தனாரோட கொஞ்சிக் குலாவ இன்னிக்குத்தான் நேரம் கிடைச்சுதா?”

“என்கிட்ட எதையும் கேக்காதம்மா. ‘அம்மாவோட திதிக்குகூட வரமுடியல. இதுக்கு எப்படி வரமுடியுமு’ன்னு மூஞ்சில அடிச்சாப்பல சொல்லிட்டாம்மா!”

தாய் மகளாகி, மகள் தாயாகி நின்றபோது ―

சுலோச்சனாவின் ‘அவர்’ வந்தார். பிள்ளை வீட்டாருக்குக் கேட்காத குரலில் கஷ்டப்பட்டுக் கத்தினார்:

“இன்னிக்கு என்னடி வந்துடுத்து உனக்கு? என் தம்பி கிட்டதட்ட அழுதுகிட்டே போறான். அவன்கிட்ட என்ன பேசின? நம்ம பேமலி ஒரு பேராசிரியரோட பேமிலின்னு பிள்ளை வீட்டுல நினைக்கிறதுக்காக, நானே அவன் இருப்பிடத்த கண்டுபிடிச்சி கூட்டிவந்தேன்... துரத்திட்டேயே...”

“அதை அப்புறம் பேசலாம். முதல்ல இவளைக் கூட்டிக்கொண்டு போவோம்!”

“ஆட்டோ ரிக்‌ஷால வேற வந்து தொலைச்சே, பஸ்ஸுல வந்தா என்ன கேடு? ஒரு ரூபாய் செலவ 15 ரூபாயா இழுத்து வைச்சிட்டுயே! நீ வெளிய போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/166&oldid=1376171" இலிருந்து மீள்விக்கப்பட்டது