பக்கம்:இன்னொரு உரிமை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நிசமான பத்தினி

றுவடை முடிந்துவிட்டதால் வயக்காடு ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதுபோல், சீனியம்மாவும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். பஞ்சாயத்துப் பழைய தலைவர், பழைய உறுப்பினர்கள், நிரந்தரமான மணியம், கர்ணம் போன்ற ‘பெரிய இடத்து’ வீடுகளுக்கு முன்னால் போடப்பட்டிருந்த அரசாங்க வாரியக் குழாய்களில் நீர் பிடிக்க முடியாமல் குழாய்கள் கடந்த ஆறுமாத காலமாகப் பழுதடைந்து தேடுவாரற்றுக் கிடந்ததால், அவள் காலையிலேயே எழுந்து ‘தோண்டிப்பட்டையும்’ குடமுமாக ஊர் கிணற்றிற்குச் சென்று ஐந்தாறு குடந் தண்ணீரைப் பிடித்து விட்டு, அதே கையோடு சாணந் தெளித்து முற்றத்தைப் பெருக்கிவிட்டு, பிறகு அந்த ஓலை வீட்டின் தரையையும், திண்ணையையும் சாண நீரால் மெழுகிவிட்டு, செல்லமாக வளர்க்கும் கன்றுக்குட்டிக்கு அருகாமையில் இருந்த ‘தோட்டந் தொலைவில்’ போய்ப் புல்லை வெட்டிக் கொண்டுவந்து போட்டுவிட்டு, ஓடைக்கருகே நின்ற கருவேல மரக்குச்சிகளை ஒடித்து விறகாகக் கொண்டுவந்து, சோறு பொங்கி, படுத்த படுக்கையாகக் கிடக்கும் அய்யாவுக்கு ‘அன்னப்பாலை’க் கொடுத்துவிட்டு ‘ஒதுங்குமிடமாக’ இருந்த சுற்றிலும் பனையோலைகளால் மறைச்கப்பட்ட ‘செருவையில்’ இற்றுப்போயிருந்த ஓலைகளை எடுத்துவிட்டு ஒடிந்த கம்புகளை நீக்கி, வாதமடக்கிக் கம்புகளைக் கட்டி,
சி.-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/170&oldid=1368816" இலிருந்து மீள்விக்கப்பட்டது