பக்கம்:இன்னொரு உரிமை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிசமான பத்தினி169

விளக்கின் ஒளியில் பீடி சுற்றும் அந்தப் பெண்களிடம் வந்து இலை வெட்டிப் பழகினாள். முதலில் காகிதங்களை வெட்டிப் பழகி, பிறகு இலைகளை வெட்டினாள். படிப்படியாக இலைகளைச் சுற்றுவதிலும், தூள்களை வைப்பதிலும், சுருட்டி மடக்குவதிலும் தேர்ச்சி பெற்றாள். ஆரம்பத்தில் அவள் எங்கே தங்கள் இலைகளை வீணடித்துவிடுவாளோ என்று அஞ்சிய பெண்கள், “அவா இலையை வெட்ட என் இலைதானா கிடச்சுது” என்பார்கள். சீனியம்மை வயக் காட்டில் இருந்து வரும்போது அவர்களுக்கு குளக்கரையில் கிடைக்கும் நாகப்பழங்களையும், ஆலம் பழங்களையும் கொடுத்து அவர்களைச் சரிக்கட்டினாள். ஆனால் இப்போது அந்தப் பெண்கள், “எனக்கு சுத்து சீனி... உனக்கு வேணுமானால் பத்து பைசா தாரேன்” என்பார்கள். அவளைச் சரிக்கட்டும் அளவிற்கு சரியாகப் பழகிக்கொண்டாள். சீனியம்மை பீடி சுற்றுவதில் ‘சுயாட்சி’ பெறும் நாள் வந்தது.

மண்வெட்டியை வந்த விலைக்கு ஒருவருக்கு விற்று விட்டு, அந்தப் பணத்தில் ஒரு கத்திரிக்கோல் வாங்கினாள். மூங்கிலால் பின்னிய ஒரு வட்டத்தட்டை வாங்கினாள். அய்யாவும், அம்மாவும் அவளுக்கு மறுப்புச் சொல்லவில்லை. சீனியம்மை, தனது சக தோழிகளுடன் பீடிக் கடைக்குப் போனாள். ஏற்சனவே வேப்பமரத்தடிக்கு வந்து அந்தப் பெண்களுடன் வம்பளந்துவிட்டுப் போகும் கணக்குப்பிள்ளை வாயெல்லாம் பல்லாக அவளைப் பார்த்தான். முன்பெல்லாம் அவளைப் பார்த்து, “வயலுக்கா தாயி போற” என்று கேட்கும் ஏஜெண்ட் மட்டும் “பீடி சுத்தமா இருக்கணும். இதுகளை வெட்டுறது மாதிரி இல்ல” என்று அசுத்தமாகவும். வெட்டொன்று துண்டொன்றாகவும் பேசினான். அவனது தோரணை சீனியம்மைக்கு என்னவோ போலிருந்தது என்றாலும் முன் கொசுவத்தைச் சரிப்படுத் திக் கொண்டு சங்கடத்தோடு சிரித்தாள்.

பீடிக்கடை, கிட்டத்தட்ட எருமை மாட்டுக் கொட்டகை மாதிரி இருந்தது. ஒரு ‘அரங்கு’ அறைக்குள், பதினைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/178&oldid=1369265" இலிருந்து மீள்விக்கப்பட்டது