பக்கம்:இன்னொரு உரிமை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்னொரு உரிமை 179

லட்சுமி கண்ணைக் கசக்கினாள். சின்னச்சாமியால் அவள் அழுவதைப் பார்க்க முடியவில்லை. அவளை எப்படியும் சமாதானப்படுத்தியாக வேண்டும். அவருக்கு நாற்பது வயதும், மூன்று பிள்ளைகளும் ஆகிவிட்டாலும், ‘மாப்பிள்ளை’ பாக்கப்போனதில் பிரிவு நாலுநாள் ஆகிவிட்டது மூன்று நாள்தான் அவரால் பிரிந்திருக்க முடியும்.

கதவிற்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த தமயந்தி கண்ணீர் விட்டாள். கிட்டத்தட்ட மூன்று வருஷமாய்ப் ‘பிள்ளை பிடிக்கும் படலம்’ நடந்து வருகிறது, மாடசாமி மாமா மவன் மாறுகண்ணு என்கிறாளே! இவா கண்ணுதான் மாறுகண்ணு! இல்லன்னா அந்த மின்வெட்டுக் கண்ணை, லயமாகப் பார்க்கும் அந்தக் கவர்ச்சிக் கண்ணை, வேண்டுமென்றே மாறுகண் என்பாளா? எல்லாம் அப்பா, அம்மா இறந்துபோனதால் வந்த வினை. அவள் வயசுப்பெண்ணு ஒருத்திக்குக் கல்யாணமாகி கையில ஒண்ணும் வயித்துல ஒண்னும் இருக்கு. இவள் மட்டும் புருஷனைப் பின்கட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போறாளே! அப்படித்தானே எல்லாத்துக்கும் இருக்கும்?

நகையும் ரொக்கமும் அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அண்ணிக்காரி, வரன்களைச் சாக்குப் போக்குச் சொல்லித் தட்டிக் கழிக்கிறாள் என்பது தமயந்திக்குப் புரிந்துவிட்டது. ஆனால் இந்த அண்ணனுக்குத் தெரியலியே!

னைவிக்காரி அவலை நினைத்து உரலை இடிக்கிறாள் என்பது சின்னச்சாமிக்கும் லேசாகத் தட்டுப்பட்டது. ஆகையால் ஒருநாள் மனைவியிடம் சாமர்த்தியமாகப் பேசினார்

“லட்சுமி! நம்ம தமயந்திக்கு நல்லகாலம் பொறந்துட்டு. நம்ம பஞ்சாயத்து பிரஸிடெண்ட் பரமசிவம் இருக்கானில்லியா? அவன் சம்மதிச்சுட்டான். ஊருக்கே தலைவன். சுற்றுவட்டாரத்துல அந்தப் பரமசிவம் தெரியாட்டாலும் இந்தப் பரமசிவம் தெரியும்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/188&oldid=1369572" இலிருந்து மீள்விக்கப்பட்டது