பக்கம்:இன்னொரு உரிமை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 சு. சமுத்திரம்


குப்பைத் தொட்டிக்கு அருகே நான்கைந்து சொறி நாய்கள், குட்டிகள் சசிதமாய், ஒன்றின் கழுத்தில், இன்னொன்று பொய்க்கடி கடித்தபடி கோலோச்சிக் கொண்டிருந்தன. மைதானத்தில் தலையை லேசாய்ப் பின்புறமாய் திருப்பியபடி படுத்துக் கிடந்த வெள்ளைப் பசு ஒன்று, அசை போட்டுக் கொண்டிருந்தது.

வாலிபால் நெட் கட்டப்பட்டது. தெற்கு அணியின் சதுரக் கோட்டின் மூலையில் சம்பத் கையில் பந்தை வைத்து உருட்டிக் கொண்டிருந்தான். 'கட்’ அடிப்பதற்காக, நெட்டிற்கு முன்னால் இடது பக்கம் நின்றவர், கையைத் தூக்கி, நெட்டோடு நெடுகத் தாவி, வலது பக்கம் கையை கொண்டு போனார். உடனே எதிராளியும் அப்படியே துள்ளி, அப்படியே கையை அந்தரத்தில் துழாவினார். சர்விஸ் போட வேண்டிய சம்பத் ஆட்டத்தை மறந்து, ஆட்டக்காரி போல் நின்ற ஒரு பால்கனி பெண்மேல் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தான். உடனே, அவன் அணியைச் சேர்ந்த ஒருவர், “சர்வீஸ் போடேண்டா, ஆபீஸ் மாதிரியே இங்கேயும் அசமஞ்சமாய் நிற்கறியே” என்றார் ஆபீஸ் என்றதும் பலருக்கு வாயாடியது.

“ஆமா மீதி அடிஷனல் டி. ஏ. எப்போ கிடைக்கும்?”

“எப்பவாவது கிடைக்கும்.”

“இல்லப்பா ஒருவேளை ஜி.பி. எஃப்ல சேத்திடப் படாது பாரு.”

“நோ நோ. அப்படி வராது.”

“வெயிட் அண்ட் ஸீ.”

எதிரெதிர் அணியாய் நின்றவர்கள். நெட்டிற்கு அருகே கூடி அடுத்த பஞ்சப்படி, சேமிப்பு நிதியில் வைக்கப்படுமா அல்லது ரொக்கமாகத் தரப்படுமா என்று பட்டிமண்டபம் நடத்திக்கொண்டிருந்தார்கள். ஆட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த சின்னப்பிள்ளைகள் அவர்களை எரிச்சலோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/19&oldid=1369342" இலிருந்து மீள்விக்கப்பட்டது