பக்கம்:இன்னொரு உரிமை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்னொரு உரிமை 183

கூடாது பாரும்... அதனால நாளைக்குக் கர்ணத்தை வர வழைச்சி சொத்தைப் பிரிச்சி மூணாவது மனுஷனிடம் குத்தகைக்கு விடலாமுன்னு நினைக்கிறேன்.”

“தங்கச்சிக்கு எதுக்குச் சொத்து?”

“அவளும் ஒங்க அப்பனுக்குப் பிறந்தவள்தானே... அவளுக்கும் சொத்துல பாத்தியதை உண்டுல்ல?”

லட்சுமி நிஜமாகவே குதித்தாள்:

இந்த அநியாயம் எங்கேயாவது உண்டா? பொம்பிளைக்குச் சொத்து, நம்ம சாதில கொடுக்கது கிடையாது. வரதட்சணை வேண்டாமுன்னு சொல்லிட்டு நகை வேண்டாமுன்னு சொல்விட்டு... இப்போ சொத்துல பங்கு கேக்கிறது நியாயமா? அட பாழாப் போற கடவுளே..."

எவர்சில்வர் எகிறினார்: கப்பல்ல பொண்ணு வருது'ன்னானாம் ஒருவன். அப்படின்னா எனக்கு ஒண்ணு; என் அப்பனுக்கு ஒண்ணு'ன்னானாம் இன்னொருவன். உங்க கதை இப்படித்தான் இருக்கு! தமயந்திக்கு அப்பா அம்மா இல்லங்கறதுனால சொத்த அமுக்க முடியாது. நாளைக்கே பிரிச்சாகணும்..."

“இது அநியாயம்... அசிங்கம். நம்ம சாதிக்கு அடுக்காது. நேத்துகூட ரேடியோவில் வரதட்சணை வாங்கக்கூடாது, பொண்ணு வீட்டுக்காரங்கள சித்ரவதை பண்ணக் கூடாதுன்னு சொன்னாங்க.”

எவர்சில்வர் மாமா மசியவில்லை:

““”உன்னை மாதிரி நிறைய பேரு, இப்படித் தப்பா நினைக்கிறாங்க. வரதட்சணை வாங்கக்கூடாதுன்னா பொண்ணுக்குச் சொத்துல உரிமை கிடையாதுன்னு அர்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/192&oldid=1369068" இலிருந்து மீள்விக்கப்பட்டது