பக்கம்:இன்னொரு உரிமை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
செத்தாலாவது வாழலாம்

லமரத்துப் பிள்ளையார் கோவிலுக்கருகே ராமலிங்கம் வந்தபோது. அங்கே பேசிக்கொண்டிருந்த நாலைந்து விவசாயிகளில் ஒருவர் "கிராம சேவிக் ஐயா... ஒங்களைத் தான் தேடிக்கிட்டு இருக்கேன், கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுமாதிரி வந்துட்டிய!" என்றார். இன்னொரு டிராக்டர் விவசாயி, "அவரை கிராம சேவக்குன்னு சொல்லாதே மச்சான்! இப்போது அவரோட உத்தியோகத்துக்கு. ஊர்நல அதிகாரின்னு பேராக்கும்" என்றார்.

ராமலிங்கம் "நீங்க வேற... பேரு பெத்தபேரு... வீடு பட்டினி! பழைய கருப்பன் கருப்பனேங்கற சமாசாரந்தான், இப்போ பேசிக்கிட்டு இருக்க நேரமில்ல. யூனியன் கமிஷனர் அவசரமா வரச்சொல்லியிருக்கார், போய்க்கிட்டே இருக்கேன்" என்றார்.

"பொழுது சாஞ்ச நேரத்தில அப்படி என்ன வேல?"

"கமிஷனர் வரச்சொன்னாராம். எதுக்குன்னு எனக்கும் புயுயல."

"ஒங்க கமிஷனரு காரணமில்லாமக் கூப்புடமாட்டார். நீங்க நம்ம ஹரிஜனன் ராமசுப்புக்கிட்ட விவசாயத் தொழிலாளிக்குக் குறைந்தபட்சக் கூலி சட்டப்படி ஏழேகால் ரூபாய். ஆறு ரூபாய் கொடுத்தா வாங்காதேன்னு சொன்னியளா ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/195&oldid=1369099" இலிருந்து மீள்விக்கப்பட்டது